ரத கஜ துரக-Veeram

ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம்

இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்

சக மனிதன் ஒரு துயர் என கசிந்ததும் அகம் பதறி எழும் வீரம்

துகள் அளவும் பகை புகழ் இங்கு தவறென காப்பரனாய் நிற்கும் வீரம்

தனி அரிமாம் ஓலையென தருணம் தாக்கிடும் பெரும் வீரம்

சிகை தொட நினைத்தவன் சிரம் விழும் தலையினில் ஈடு இணையில்லா வீரம்

அட திசைகளும் திகைத்திடும் பார்த்தவை படைத்திடும் சரித்திரம் வியந்திடும் வீரம்

எரி தழலாய் நின்று எதிரிகள் அலறிட சமரினில் திமிறிடும் வீரம்

பகம் எனும் சொல்லிங்கு பரிட்சயம் இல்லையடா பரம்பொருள் வரம் தந்த வீரம்
Movie:
Veeram
வீரம்
Music:
Devi Sri Prasad
கடும் புனலே மோதவரும் வேளையிலும் தடிப்புறும் தனி வீரம்.